'எந்த வரனும் அமையல'... 'அந்த நேரம் பார்த்து மலர்ந்த காதல்'... 'காதலர்களை சூழ்ந்த எதிர்ப்பு'... சாதித்த காதல் ஜோடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 27, 2021 06:13 PM

உடல் வளர்ச்சியில் மட்டுமின்றி, மனதளவிலும் ஒன்றிப்போன காதல் ஜோடி, கடைசி வரை தங்களின் காதலில் உறுதியாக நின்று வென்று காட்டியுள்ளனர்.

sivagangai differently abled stunted growth couple love marriage

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி, இவரது மனைவி ஆனந்தவள்ளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகன் சின்னக்கருப்பு (வயது 25). இவரது உடல் வளர்ச்சி குறைவு காரணமாக 3 அடி உயரம் மட்டுமே உள்ளார்.

ஜெயபாண்டி தன்னுடைய மகன்கள் இருவருக்கும் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்தார். மூத்தவரான மாற்றுத்திறனாளி சின்னகருப்புக்கு பெண் சரிவர அமையவில்லை.

சின்னகருப்பு 9-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். இவர் கட்டிட வேலைக்காக மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தை சேர்ந்த பஞ்சம்தாங்கிபட்டி கிராமத்திற்கு சென்றார். அங்கே இவரை போன்றே வளர்ச்சியில் குறைவாக இருந்த பஞ்சு(24) என்ற பெண்ணை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார்.

பஞ்சுவின் தந்தை பெரியகருப்பன் இறந்து விட்டார். தாயார் பாப்பாத்தி தான் விவசாய கூலி வேலைக்கு சென்று அவரை கவனித்து வந்தார். அவருக்கு அக்காள், தம்பி உள்ளனர்.

இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், உடல் அளவில் குன்றியதாலும், மனதால் இருவரும் ஒருவரையொருவர் நேசித்ததால் காதலுக்கு பச்சை கொடி காண்பித்து விட்டனர்.

இதையடுத்து இவர்களது திருமணம்  பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு சின்னக்கருப்புவின் கிராமமான ஒக்கூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sivagangai differently abled stunted growth couple love marriage | Tamil Nadu News.