'தயவுசெய்து கிஃப்ட், மொய்ப்பணம் வேண்டாம்...' அதுக்கு பதிலா 'இத' மட்டும் பண்ணிடுங்க...! - அழைப்பிதழில் அருமையான 'வேண்டுகோள்' விடுத்த தம்பதி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக திருமணத்தின் போது மொய்ப்பணம் செலுத்துவது வழக்கம். அதிலும் வசதி படைத்தவர்கள் மொய்ப்பணம், பரிசுப்பொருட்கள் வேண்டாம் என திருமண பத்திரிகையில் அச்சிட்டு வழங்குவதையும் பார்த்திருக்கிறோம். சிலர் தங்கள் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்குவர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பிட்டாபுரத்தை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளாரான தயாசாகர் என்பவருக்கும் கிருஷ்ணவேணி என்பவருக்கும் நேற்று பிட்டாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தில் நடந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் வாழ்த்தையும் பெற்று வருகிறது.
அதாவது, தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளாரான தயாசாகர் தன்னுடைய திருமண அழைப்பிதழில், 'எங்களை மனதார வாழ்த்த வரும் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் தாழ்மையான ஒரு வேண்டுகோள். தயவு செய்து பரிசு பொருட்கள், மொய்ப்பணம் ஆகியவற்றை தவிர்த்து முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்' எனக் கூறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி, பின்னர் ரத்த தானம் பெறுவதற்கென ஏற்பாடு செய்த ஒரு அறையில் அனைவரும் இரத்ததானம் கொடுத்திருந்தனர். வசதியாக அங்கு மருத்துவரையும், நர்ஸ் உள்ளிட்டோரையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரவி அனைவரது ஆசீர்வாதத்தையும் பெற்றுள்ளது எனலாம். மேலும் மணமக்களும், ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பலர் ரத்தம் கிடைக்காமல் மருத்துவமனைகளில் பாதித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ எனது திருமணம் நல்வாய்ப்பாக இருக்கும் எனக்கருதினேன். எனது வேண்டுகோளை ஏற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி' எனவும் தெரிவித்துள்ளனர்.