“இதுக்காக கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன தப்பு?”... '7வது திருமணத்துக்கு கொக்கி போட்ட 63 வயது நபர்'... உண்மையை போட்டுடைத்த 6-வது மனைவி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jan 25, 2021 08:08 PM

ஏழாவதாக திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்ட 63 வயது முதியவர், அதற்காக சொன்ன காரணம் அவரின் ஆறாவது மனைவியிடம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

gujarat denied sex by 6th wife man looks to marry again

குஜராத் மாநிலம், சூரத் பகுதியை சேர்ந்தவர் அய்யூப் தேகியா (வயது 63). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னுடன் 21 வயது குறைவான பெண்ணை ஆறாவதாக திருமணம் செய்திருந்தார். இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததன் பெயரில் அவரை பிரிந்து சென்றுள்ளார்.

'அவள் எனதருகில் உறங்குவதற்கு கூட விரும்புவதில்லை. தொற்று வியாதிகள் உருவாகி விடும் என பயப்படுகிறார். எனக்கு நீரிழிவு நோய், இருதய நோய் என பல பிரச்சனைகள் உள்ளது. இதனால் எனக்கு உடலுறவு செய்து கொள்வதற்கு மனைவி வேண்டும்' என தேகியா தெரிவித்துள்ளார்.

தேகியாவின் முதல் மனைவி அதே கிராமத்தில் தனது ஐந்து பிள்ளைகளுடன் தற்போதும் வசித்து வருகிறார். முதல் மனைவியின் ஐந்து பிள்ளைகளுக்கும் 20 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது. இவரது ஆறாவது மனைவியான 42 வயது பெண்மணி, தேகியாவின் பின்புலம் குறித்து விசாரித்து பார்த்ததில் தான் அவருக்கு ஏற்கனவே ஐந்து திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்தது.

இதனால் அவர் அதிர்ச்சியடைந்த நிலையில், போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். தேகியா திருமணம் செய்த ஆறாவது மனைவி, முன்னதாக விதவையாக இருந்துள்ளார். அதனை பயன்படுத்தி அவருக்கு அதிக நகைகள் மற்றும் பணம் கொடுத்து கவனித்து கொள்வதாக கூறி அவரை தேகியா திருமணம் செய்துள்ளார்.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணை அவரது சகோதரியின் வீட்டில் விட்டுச் சென்ற தேகியா, அதன் பிறகு அவரை அழைத்துச் செல்ல வரவேயில்லை. அது மட்டுமில்லாமல், மற்ற மனைவிகளிடம் இருந்து ஏன் அவர் பிரிந்து சென்றார் என்பது குறித்தும் தேகியா எதுவும் கூறவில்லை.

ஆறாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் உடலுறவு கொள்ள மறுத்ததால் இனி அவருடன் வாழ விருப்பமில்லை என தேகியா தெரிவித்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட நபர்களின் அறிக்கை எடுத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gujarat denied sex by 6th wife man looks to marry again | India News.