'நம்ம கெத்து என்னன்னு...' 'பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு காட்டணும்...' 'கெத்து ப்ளான்ல ஒரே ஒரு சின்ன மிஸ்டேக்...' - கடைசியில இப்படி ஆகி போச்சே...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமணமகள் குடும்பத்தினரை ஏமாற்ற ராணுவ சீருடை அணிந்துக்கொண்டு ராணுவப்பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இண்டோரில் உள்ள தலைமை ராணுவ முகாம் பகுதியில் கடந்த குடியரசு தினத்தன்று ஒருவர் ராணுவ வீரர் போல் உடையணிந்து கொண்டு ராணுவ முகாம் இருக்கும் பகுதிகளில் சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார். அவர் நடந்துக்கொண்ட விதம் மற்றும் உடையைப் பார்த்து ராணுவத்தினருக்கு சந்தேகம் கிளம்பியது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பீகாரை சேர்ந்த மிதுன் வர்மா என்று தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘’மிதுன் வர்மா என்பவர் பீகாரின் ராஜ்கத் மாவட்டத்திலுள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர். அவர் பிதாபூரில் காவலாளியாக பணிபுரிகிறார். இன்னும் சில தினங்களில் வர்மாவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. ஆகவே மணமகள் வீட்டாரை கவர, தான் ஒரு ராணுவவீரர்போல் உடையணிந்துக் கொண்டு ராணுவ முகாம் பகுதியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு வந்திருக்கிறார். ஆனால் ராணுவ உடையை மாற்றி தவறாக அணிந்திருந்ததால் ராணுவ அதிகாரிகள் எளிதாக கண்டுபிடித்துவிட்டனர்.
மேலும் வர்மாவின் செல்போனில் ராணுவவீரர் ஐடி கார்டை போலியாக தயாரித்து புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெண் குடும்பத்தை ஏமாற்றுவதை தவிர பிற காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
