'எங்கிருந்துப்பா இப்படிலாம் ஐடியா பண்றீங்க?'.. திருமணத்தன்று ‘மணமக்களுக்கு’ குவியும் பாராட்டுக்கள்!.. ‘அப்படி என்ன செஞ்சாங்க?’
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை போன்ற தென் மாவட்டங்களில் எந்தவொரு சுப நிகழ்ச்சிகளிலும் மொய் வழக்கம் ஒரு முக்கியமான சடங்கு.
ஒரு விஷேஷத்தின் போது ஆகும், செலவை குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினர் ஏற்பது சுமையாக இருக்கும். எனவே உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கு தங்களால் முடிந்த பணம், நகை உள்ளிட்டவற்றை மொய்யாக வழங்குவார்கள். இதனை வைத்து மொத்த சுமையை குறைத்துக் கொள்ளலாம். மீண்டும் மொய் செய்தவர்களுக்கான விசேஷம் வரும்போது அவர்கள் போட்ட மொய்யை திருப்பி செய்துவிடலாம். சுமையும் தெரியாது. ஏனென்றால் எல்லாருக்கும் ஒரே நேரத்தில் விசேஷம் வரப்போவதில்லை.
இப்படி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இல்லங்களிலோ, மண்டபங்களிலோ மொய் நோட்டில் மொய்ப் பணத்தையும் நகைப் பொருளையும் நம்பிக்கையானவர்கள் பெற்றுக்கொண்டு பெயர் மற்றும் ஊர் பெயருடன் சேர்த்து குறிப்பிட்டு எழுதி வைத்துக் கொள்வர். இதைத் தவிர மொய்விருந்து என்கிற பெயரிலும் இப்படி விசேஷங்களை நடத்தி உறவினர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு மொய்கள் பெறப்படும். ஆனால் அண்மைக் காலமாகவே இந்த நடைமுறை டிஜிட்டலுக்கு மாறி வருகிறது.
இந்நிலையில் தற்போது மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும், பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில்டிஜிட்டல் முறையில் போன் பே, கூகுள் பே மூலம் மொபைல் ஸ்கேன் செய்து, அதன் மூலம் ஆன்லைனில் மொய் செய்யும் வகையிலான QR Code-உடன் கூடிய பத்திரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.
திருமணத்துக்கு வந்தவர்கள் கூகுள் பே மூலம் மொய் செலுத்தினர். மொய் எழுதும்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், சில்லறை, மொய்க்கவர் உள்ளிட்டவை கிடைப்பது சிரமமாக இருப்பதாலும் இப்படி கூகுள் பே, போன் பே மூலமாக பணம் செலுத்தும் முறையை இவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களின் புதிய முயற்சி பாராட்டை பெற்று வருகிறது.