"கல்யாணமாகி '18' நாள் தான் ஆச்சு... அதுக்குள்ள இப்டி நடக்கணுமா??..." 'மனைவி' வீட்டிற்கு சென்ற கணவருக்கு காத்திருந்த மிகப்பெரிய 'ஷாக்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச மாநிலம், சதர்பூர் மாவட்டத்தில் திருமணமான 18 நாட்களிலேயே தனது காதலருடன் புதுமணப் பெண் ஓட்டம் பிடித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த மூர்த்தி ரைக்வார் என்ற இளம்பெண்ணுக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் என்பவருக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு செய்யப்படும் சில கல்யாண சடங்குகளுக்காக புதுமண தம்பதியினர் பெண் வீட்டிற்கு வந்துள்ளனர்.
சம்பிரதாயம் முடிந்த பின்னர் மணப்பெண் கணவர் வீட்டிற்கு செல்வதாக இருந்த நிலையில், அந்த சமயத்திற்குள் மூர்த்தி ரைக்வார், அக்கிராமத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். அது மட்டுமில்லாமல், சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் மற்றும் ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இருவரும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் பெண்ணின் குடும்பத்தினர் பதறிப் போன நிலையில், உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் மாயமான மூர்த்தி ரைக்வார் மற்றும் அவரது காதலனைத் தேடி வருகின்றனர். தனது மனைவி காதலனுடன் ஓடிப் போன தகவலறிந்த ராகுல், உடனடியாக பெண் வீட்டிற்கு வந்தது அப்பகுதியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
திருமணமான 18 நாட்களிலேயே காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுமணப்பெண்ணால் இரு வீட்டாரும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மற்ற செய்திகள்
