'ஆக்சிஜன் கருவியோடு...' 'கொரோனா வார்டில் நடந்த டும் டும் டும்...' - நெகிழ வைக்கும் காதல் கதை...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன.

இந்த நிலையில் கொரோனா வார்டில் திருமணம் செய்த இங்கிலாந்தை சேர்ந்த காதலர்களின் திருமணமும் தற்போது வைரலாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓ பிரையன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
துரதிஷ்டவசமாக எலிசபெத்திற்கும், சைமன் ஓ பிரையனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஒரே ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருவரில் சைமன் ஓ பிரையனின் நிலைமை மிகவும் மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தங்கள் திருமணம் ஜூன் மாதம் நடைபெறாத நிலையில் இந்த வருடம் நடக்க வேண்டும் என காதல் ஜோடிகள் விரும்பியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அவர்களின் நிலைமை மோசமடைந்து வந்ததால் மருத்துவமனையில் திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்று கேட்டுள்ளனர்.
தங்களின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு மருத்துவமனை ஊழியர்களிடம் போராடியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சைமனின் நிலைமை மிகவும் மோசமானதாகவும் சைமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் தங்களின் திருமண கனவை கையில் ஆக்ஸிஜன் கருவியை அணிந்தபடி கைகளை பிடித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கூறிய எலிசபெத், 'ஒவ்வொரு முறையும் மூச்சு விடுவதற்கு சிரமப்படும் திகிலூட்டும் அனுபவம், நாம் விரும்பும் மனிதர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. நாங்கள் ஒருவருக்கொருவர் இல்லாமல் இருந்திருந்தால், திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், நாங்கள் இப்போது இங்கே இருந்திருப்போம் என்று நான் நினைக்கவில்லை' என மனம் நெகிழ கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
