'உடலுறவின் போது இளைஞருக்கு நடந்த துயரம்'... 'பதறிய இளம்பெண்'... எச்சரிக்கும் மருத்துவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 29, 2021 06:15 PM

உடலுறவின்போது இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சிக்குரிய துயரத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

africa phalombe man dies during sex extreme orgasm cause of death

Phalombe பகுதியைச் சேர்ந்த 'சார்ல்ஸ் மஜாவா' என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, திடீரென மயங்கிய அவர், எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்டார்.

இதனால் பதறிப்போன அந்த பெண், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சார்ல்ஸ் மஜாவா உயிரிழப்பு குறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

உடலுறவின்போது சார்ல்ஸ் மஜாவா உயிரிழந்ததை உறுதி செய்த காவல்துறையினர், அந்த பெண்ணுக்கு இதில் தொடர்பில்லை என உறுதி செய்து, அவரை கைது செய்யவில்லை.

சார்ல்ஸ் இறப்பு குறித்து ஆய்வு செய்த மிகோவி ஹெல்த் சென்டர், தீவிர புணர்ச்சியே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என கண்டறிந்துள்ளனர்.

தீவிர புணர்ச்சியின்போது மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு இதுபோன்ற திடீர் மரணத்துக்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், ஆரோக்கியமான வாழ்வுக்கு உடலுறவு மிக மிக அவசியம் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இதய ஆரோக்கியத்துக்கும், உடலுறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், சரியான கால இடைவெளியில் உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மிக மிக குறைவாகவே ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

உடலுறவு வைத்துக்கொள்ளாதவர்களுக்கு மனதளவில் பயம் உருவாகி அதுவே மாரடைப்புக்கு காரணமாக அமைவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலுறவு வைத்துகொள்பவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், வாழ்க்கை முறையும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகளில் உடலுறவு முக்கிய பங்கு வகிப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Africa phalombe man dies during sex extreme orgasm cause of death | Tamil Nadu News.