"அந்த WIDE பால் காலுல பட்டிருந்தா அன்னைக்கே RETIREMENT தான்".. ஜாலியாக சொன்ன அஸ்வின்.!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.
மொத்தமுள்ள 12 அணிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தீவிரமாக ஆடி வருகின்றனர்.
இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளை சூப்பர் 12 சுற்றில் ஆடி உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி உள்ளது. மேலும், தங்களது பிரிவில் முதல் இடத்திலும் இந்திய அணி உள்ளது.
மீதமுள்ள போட்டிகளில் இதே போன்று அசத்தலாக ஆடினால் நிச்சயம் அரை இறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறி விடலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என இருந்த போது அஸ்வின் களத்தில் வந்தார். முதல் பந்தில் இருந்து சாமர்த்தியமாக அஸ்வின் விலகிக் கொள்ள அது வைடாக மாறி இருந்தது.
தொடர்ந்து, கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட, மிகவும் அழகாக அந்த பந்தை ஃபீல்டர் மேலே தூக்கி அடித்து இந்திய அணி வெற்றி பெறவும் அஸ்வின் உதவி இருந்தார். அதிலும், அந்த வைடு பந்தை திறம்பட அஸ்வின் விலகிக் கொண்டது பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.
இந்த நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இன்னும் அசத்தலான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதில் பேசிய அவர், "நவாஸ் போட்ட பந்து வைடு ஆகாமல், ஒரு வேளை எனது பேடில் பட்டிருந்தால் ஒரே ஒரு விஷயம் தான் நான் செய்திருப்பேன். டிரெஸ்ஸிங் ரூமுக்கு திரும்ப சென்று எனது ட்விட்டர் பக்கத்தை திறந்து, "மிக்க நன்றி, எனது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் பயணம் அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி என எழுதி இருப்பேன்" என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வேளை நவாஸ் வீசிய பந்து வைடு ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும். இதனால், தன் மீது எழும் விமர்சனம் காரணமாக ஓய்வு முடிவை எடுப்பது தான் சிறந்த வழி என்பதை தான் அப்படி ட்வீட் செய்வதாக ஜாலியாகவும் அஸ்வின் குறிப்பிட்டிருந்தார்.