இனி சென்னை பீச் போறவங்களுக்கு இப்படி வசதி வரப்போகுதா..? - வெளியான தகவல்கள்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் பிரதானமான இடங்கள் பல உண்டு என்றால் அவற்றுள் அதிக மக்கள் கூடக்கூடிய இடங்களாக பீச், பார்க், தியேட்டர், ரயில்/பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் இருக்கின்றன.
இவற்றில் சென்னை கடற்கரை மிகவும் முக்கியமானது. தமிழக முழுவதும் இருந்து மக்கள் பலரும் சென்னை கடற்கரைக்கு விடுமுறை நாட்களிலும் விசேஷ நாட்களிலும் வருகை தருவது உண்டு. சென்னைவாசிகள் பலரும் ரிலாக்ஸ்காக சென்னை பீச்சுக்கு வருவதுண்டு. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கு ஏற்ற தளமாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகள் திகழ்கின்றன.
ஏகோபித்த மக்கள் கூடக் கூடிய இந்த சென்னை கடற்கரைகளில், தற்போது முக்கிய வசதிகள் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பலருக்கும் தேவையாக இருப்பது இணையதள சேவை தான். இந்த இணையதள சேவையை தரும் வகையில் மெரினா கடற்கரையில் வைஃபை வசதி வரப்போவதாக தகவல் தெரிவிக்கின்றன.
நகரத்தின் முக்கிய இடமான, மக்கள் அதிகம் கூடும் இடமான, பீச்சில் வைஃபை வசதி கொண்டு வருவதன் மூலம் மக்கள் இலவச இணைய சேவையை பெற முடியும் என்று கூறப்பட்டு, முதற்கட்டமாக ஐந்து வைஃபை சேவைகளை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் இணைந்து சென்னை மாநகராட்சி வழங்கவிருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.