“இனி நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் இதை செய்வார்கள்!”.. 'ரஜினி' தொடர்பாக ‘வருத்தம்’ தெரிவித்த சீமான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்றும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் தன்னை மன்னிக்குமாறு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த், வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், தற்போது இத்தகைய முடிவை அறிவித்துள்ளார். ரஜினி ரசிகர்கள் பலரும் ரஜினியின் இந்த முடிவு மீதான தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாலும், ரஜினியின் உடல்நலம் தான் முக்கியம் என்று மனதை தேற்றிக் கொள்ளவும் செய்கின்றனர்.
இதனிடைடே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை கடுமையாக பேசியிருந்தால் வருந்துகிறேன்” என்றும் “இனி நாம் தமிழர் பிள்ளைகளும் ரஜினியை கொண்டாடுவார்கள்” என்றும் அறிவித்துள்ளார்.
அண்மையில், “ரஜினியையும் கமலையும் அடிக்குற அடியில (விமர்சன ரீதியாக) விஜய் உட்பட எந்த நடிகனுக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் வராது!” என்று சீமான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
