‘உயிருக்கும், தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது’!.. நடிகை கஸ்தூரி பரபரப்பு ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்ற அறிவித்துள்ள நிலையில், ‘உயிருக்கும், தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது’ என நடிகை கஸ்தூரி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு, தான் ‘கட்சி தொடங்கவில்லை’ என ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினியின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும்.
கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள்.
நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்.
— Kasturi Shankar (@KasthuriShankar) December 29, 2020
மேலும், ‘எதிர்பார்த்தது தான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை’ என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
