"அவர எதுக்கு 'டீம்'ல எடுத்தீங்க??.. அந்த மாதிரி ஒரு 'பிளேயர்' உங்களுக்கு தேவையே இல்ல..." 'ஐபிஎல்' அணியின் முடிவால் 'கம்பீர்' அதிருப்தி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 14 ஆவது சீசனுக்கான மினி ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில், ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை அணியில் எடுக்க, அதிகம் போட்டி ஏற்பட்டது.
அதிகபட்சமாக, கிறிஸ் மோரிஸ்ஸை 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருந்தது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை யாரும் எடுக்க முன் வராத நிலையில், அவரது அடிப்படை தொகையான 2 கோடியை விட, சற்று அதிகமாக 2.25 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை வாங்கியது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை அந்த அணி நிர்வாகம் விடுவித்திருந்தது. இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி அணி எடுத்தது குறித்து கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். 'டெல்லி அணிக்கு ஸ்மித் எப்படி பொருந்துவார் என புரியவில்லை.
அந்த அணியில் ரிஷப் பண்ட், ஹெட்மயர் ஆகியோர் மிடில் ஆர்டரில் பலமாக உள்ளனர். டாப் ஆர்டரில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதற்கிடையே, ஸ்டீவ் ஸ்மித்தை ஏன் இணைத்துள்ளனர்.
அதே போல, ரபாடா, நோர்ஜே, ஹெட்மயர், ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் இருக்கின்றனர். அனைவரும் சிறப்பாக ஆடி வருவதால், எந்த வெளிநாட்டு வீரர்களை இறக்க வேண்டும் என்பதில் டெல்லி அணிக்கு குழப்பம் ஏற்படலாம்.
மிக குறைந்த தொகையில் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்கியதை மட்டும் நான் ஒத்துப் போகிறேன். அவருக்கு அதிக தொகை கொடுத்து டெல்லி வாங்க முற்பட்டிருந்தால், நான் அதிகம் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டேன். ஸ்மித்தும் சிறந்த வீரர் தான். ஆனால், டெல்லி அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு வீரர் தேவையில்லை' என கம்பீர் கூறியுள்ளார்.