ரஜினி கட்சி ஆரம்பிக்கலைனா ‘ஜோதிட’ தொழிலை விட்றேன்னு சொன்னீங்க..! நெட்டிசன்கள் ‘சரமாரி’ கேள்வி.. ஜோதிடர் ‘ஷெல்வி’ பரபரப்பு பேட்டி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 31, 2020 04:26 PM

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து கணித்த ஜோதிடர் ஷெல்வி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Rajinikanth political entry prediction astrologer Shelvi interview

தமிழக பாஜக கட்சியின் அறிவுசார் பிரிவு தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என கணித்த தெரிவித்தார். அதில், இந்த ஆண்டு டிசம்பரில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார், அப்படி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக தெரிவித்தார். அதன்படியே பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு டிசம்பர் இறுதியில் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதனால் ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு உண்மையாகியுள்ளதாக பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரம் காட்டிய ரஜினி, அதற்குள் தான் நடித்துவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிக்க தீவிரமாக நடித்து வந்தார். அப்போது படப்பிடிப்பில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது. இதனை அடுத்து ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனைியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிவித்தார்.

Rajinikanth political entry prediction astrologer Shelvi interview

இதனால் ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு பொய்யாகி உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவர் சொன்னது போலவே ஜோதிட தொழிலை விட்டுவிடுவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இதுதொடர்பாக நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு ஜோதிடர் ஷெல்வி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

ஜோதிடர் ஷெல்வியின் பிரத்யேக பேட்டி:

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajinikanth political entry prediction astrologer Shelvi interview | Tamil Nadu News.