'வெளிய தலை காட்ட முடியல...' 'சொந்த காரங்க வேற கிண்டல் பண்றங்க...' - 3 நாளா படாத பாடு படும் ரஜினி ஃபேன்ஸ்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் இனிஅரசியலுக்கு வரவில்லை என தெரிவித்திருந்த நிலையில் அவரின் ரசிகர்கள் தங்களின் மனக் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடான கோடி ரசிகர்களையும் கொண்டுள்ள தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த வருடம் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
பத்தாண்டுகளுக்கு மேல் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என எதிர்பார்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவர்களை சொர்க்கத்திற்கே கொண்டு சென்றது எனலாம்.
ஆனால் கடந்த இரு நாட்களுக்கு முன் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தன் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு கொரோனா பரவும் இந்த சூழலில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி இனி அரசியலுக்கு வருவதில்லை என தெரிவித்திருந்தார்.
இதனால் ரஜினிகாந்த் அவர்களின் போயஸ் கார்டன் வீட்டிற்கு முன் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் ரஜினி அவர்களின் ரசிகர்களின் குடும்பத்தார் கேலி செய்வதாலும், யாரிடம் முகம் [பார்த்து பேச முடியாததாலும் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு செல்ல முடியாமல் சென்னை போயர்ஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன்பு காத்திருப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இன்னும் பலரும் அவரது இல்லத்திற்கு ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
