'இவங்களுக்கெல்லாம் லீவு கிடையாது'... 'பணிக்கு கண்டிப்பா வரணும்'... தமிழக அரசு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரெல்லாம் பணிக்கு வர வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''பல்கலைக்கழக தேர்வுகள், நுழைவு தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. அதேபோன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் இயங்கும் என உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார்.