'சென்னையில் உணவு டெலிவரி பாய்க்கு கொரோனா'... 'எந்த வீட்டிற்கு எல்லாம் டெலிவரி'... கணக்கெடுப்பு தீவிரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 29, 2020 04:46 PM

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Food Delivery Boy tested Positive for Corona

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

26 வயது இளைஞரான அவர், தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த ஊழியர் உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.