இது இந்தியாவுக்கு கெடைச்ச 'சாதக வரம்'... 'கண்டிப்பா' நாம இதை செய்யணும்... சீனாவுக்கு 'ஆப்பு' வைக்க செம ஸ்கெட்ச்?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவல், தகுதியற்ற மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி, பிற நாட்டு நிறுவனங்களை வளைத்துப்போட முயற்சி செய்வது போன்ற காரணங்களால் சீனா மீது இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் வெறுப்பாக உள்ளன. உச்சகட்டமாக சீனாவில் இருந்து இனி மருத்துவ உபகரணங்களை வாங்குவது இல்லை என இந்தியா நேற்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சீனா மீது உலக நாடுகள் கொண்டுள்ள வெறுப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்து இருக்கிறார். வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் பேசிய நிதின் கட்கரி, '' கொரோனாவால் ஒவ்வொரு நாடும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவுடன் வர்த்தகம் செய்ய பல நாடுகள் தயங்குகின்றன. இது ஒரு வகையில் இந்தியாவுக்கு சாதக வரம் போல அமைந்துவிட்டது,'' என தெரிவித்தார்.
மேலும் பொருளாதார ரீதியான முன்னேற்றத்த்தில் கவனம் செலுத்துவோம் என்றும், அதற்கான சூழ்நிலையை இந்தியாவில் ஏற்படுத்தி வெளிநாட்டு முதலீடு ஈர்க்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக சீனாவில் இருந்து 1000 நிறுவனங்கள் வெளியேற இருப்பதாகவும், அவை சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.