'சென்னையில் ஒரே தெருவில்....' '11 பேருக்கு கொரோனா...' கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மயிலாப்பூரில் இருக்கும் ஒரு தெருவில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவுவதன் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
கொரோனா வைரஸ் அதிகம் பரவிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு எட்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை சுமார் தமிழகத்தில் மட்டும் 2,058 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 1128 பேர் சிகிச்சை பெற்று கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் சுமார் 678 பேர் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர். தற்போது சென்னையில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தரமணி் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் தான் இவருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டது. தற்போது இவர் ஓமாந்தூரரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 11 பேருக்கு இன்று கொரானா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த சம்பவம் மயிலாப்பூர் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் சென்னை மாநகராட்சி அப்பகுதி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
