'துளிர்த்த நம்பிக்கை'... 'சென்னை மக்களுக்கு பாசிட்டிவ் செய்தி'... கொரோனா தொற்றில்லா இடமாக மாறிய மண்டலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தோற்று அதிகமாகவே காணப்படுகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.

வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 15 கொரோனா பாதித்த பகுதிகள் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சோழிங்கநல்லூர் கொரோனா தொற்றில்லாத மண்டலமாக மாறியுள்ளது.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றில்லா மண்டலமாக சோழிங்கநல்லூர் மாறியுள்ளது. இது சென்னை மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
