'சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு கொரோனா'... 'ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு'... கடைக்கு போனவங்க லிஸ்ட் எடுக்கும் பணி தீவிரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 29, 2020 01:10 PM

சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chennai : Supermarket owner in Mandaveli tested positive for corona

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா பரவுவது வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சளி, காய்ச்சல், இருமல் என அறிகுறி இருந்த நிலையில், அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டுள்ளார்கள். அப்போது கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சூப்பர் மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்கக்கூடிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, அவரது கடைக்கு யாரெல்லாம் வந்து சென்றார்கள், மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் லிஸ்ட் தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.