2 நாட்களுக்கு தேவையான பொருட்களை ‘இருப்பு’ வச்சிக்கோங்க.. சென்னை மாநகராட்சி ‘முக்கிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரண்டு நாட்களுக்கு தேவையான அத்தியாசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடாமல் பெய்த கனமழையால் வீடுகளுக்கு மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று (18.11.2021) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை (19.11.2021) வரை இந்த கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு, காற்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துகொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் புகார் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.