சார், இங்க செமையா 'மழை' பெய்யுது...! ஸ்கூல், 'காலேஜ்'லாம் லீவ் விடுவீங்களா...? 'கேள்வி எழுப்பிய விஜய் ரசிகருக்கு...' - விருதுநகர் கலெக்டர் 'நச்' பதில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பிய மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி பதிலளித்துள்ளார்.

தலைநகரம் சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகி உள்ளது.
அதேப் போன்று, சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழையைப் பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் சிவா விஷ்ணு என்ற பெயரில் டிவிட்டர் கணக்கை வைத்துள்ள விருதுநகரைச் சேர்ந்த மாணவர் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா? என டிவிட்டரில் கேள்வி கேட்டு அதனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரை 'டேக்' செய்திருந்தார்.
நாளை விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும்மா...??@jmeghanathreddy @VNRCollector @Anbil_Mahesh
— ☆★🇸 🇮 🇻 🇦☆★ (@Vijaysivavishnu) November 10, 2021
இந்த கேள்விக்கு பதிலளித்த விருதுநகர் கலெக்டர் ஜெகநாத் ரெட், ‘இல்லை. கூடுதல் விடுமுறை கிடையாது தம்பி. பள்ளிக்குச் செல்லுங்கள். சூரியன் வெளியே வந்துவிட்டது. எனவே போய் படியுங்கள், விளையாடுங்கள், கொண்டாடுங்கள், திரும்ப திரும்ப அதனை செய்யுங்கள். மேலும், நம் மாவட்டத்துக்கு நல்லமழை கிடைத்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.
NO. NO more Holidays Thambi. Go to school. Sun is out. So, Study-Play-Enjoy-Repeat. Also, pray it rains well in our district
— Meghanath Reddy J (@jmeghanathreddy) November 10, 2021
அதற்கு அந்த நபர் மீண்டும், ‘சார்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்கிறது. அதனால், தான் கோரிக்கையை வைத்தேன்’ என்று கூறினார். அதற்கும் பதிலளித்த மாவட்ட ஆட்சியர், ‘இன்று மழை கண்டிப்பாக இருக்காது. ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது. நன்றாக தூங்குங்கள். நாளை பள்ளி உள்ளது. குட் நைட் தம்பி’ என பதில் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
