சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை மையம் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆந்திரா தெற்கு கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி இன்று சென்னையில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, அடையாறு, பல்லாவரம், போரூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பொழிவு காணப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
