VIDEO: என்னங்க சொல்றீங்க...? பெய்தது அப்போ 'மழை' இல்லையா...? 'அப்படியே ஒர்ஜினலா பெய்யுற மாதிரியே இருக்கு...' 'வியக்க வைத்த நாடு...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்50 டிகிரி செல்சீயஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள துபாய் நகரம் செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மழையை பெய்ய வைக்க முடிவு செய்தது.

இந்த திட்டத்தை ஏராளமான செலவுகளை செய்து வானிலை ஆய்வு மையம் கொண்டு வந்தது. இது வெறும் படாடோபம் காட்டுவதற்காக அல்ல. இதன் நோக்கம், ஒவ்வொரு ஆண்டும் வரும் வெப்ப அலைகளிலிருந்து ஓய்வு அளிப்பதும், ஒவ்வொரு வருடமும் மிகக் குறைவாக பெய்யும் மழையை அதிகரிக்க வைப்பதற்கே இந்த திட்டம்.
இந்த திட்டத்திற்காக துபாய் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கி வருகிறது. இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டன் அம்பாம் என்பவர் தலைமையில் தான் இதை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த செயற்கை மழையை பெய்ய வைப்பதற்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் மேகங்களுக்குள் எலெக்ட்ரிக்கல் 'சார்ஜ்ங்களை' வெளியிடுதல் அவசியம், அதற்கு பதிலாக, மழை பெய்யும். இதற்கு மேகத்தில் விதைத்தல் என்றும் அழைக்கப்படுகிறது.
அண்மையில், துபாய் முதற்கட்டமாக ஒரு சோதனை ஓட்டத்தை நடத்தி பார்த்தது. துபாயில் பெய்த மழையின் மத்தியில் கார்கள் ஓடும் வீடியோவையும் துபாய் அதன் அதிகாரப்பூர்வ யுஏஇ வானிலை மையம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, இது நகரத்தில் வசிப்பவர்களுக்கு சற்று ஆசுவாசத்தை வழங்கியுள்ளது.
மேலோட்டமாக பார்ப்பதற்க்கு இந்த திட்டம் வெற்றிகரமானதாக உள்ளது. ஆனால் இந்த சோதனையின் போது சில நேரங்களில் மழை மிகவும் கனமாக மாறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இந்த தொழில்நுட்பத்தினால் உருவாகும் தீங்குகள் குறித்தும் தற்போது கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
