‘பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும்’!.. சென்னை மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புயல் கரையை கடக்க உள்ளதால் சென்னையில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
![IMD inform avoid getting people out in Chennai IMD inform avoid getting people out in Chennai](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/imd-inform-avoid-getting-people-out-in-chennai.jpg)
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.11.2021) சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் நேற்றிரவு தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், அவைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று மாலை காரைக்கால்-ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதன் தாழ்வு மண்டலத்தின் வெளிவட்டப்பகுதி சென்னையை நெருங்கியுள்ளதால், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 170 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் போது சுமார் 40 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், சென்னையில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)