‘விட்டுவிட்டு வெளுக்கும் மழை’!.. அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வானிலை மையம் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. சென்னையைப் பொறுத்தவரை விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால், பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து 11-ம் தேதி வட தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.