‘கொரோனாவை வெரட்டுணும்ல!’.. இன்று பிற்பகல் 3 மணி முதல் ‘பீச்’க்கு செல்ல அனுமதி இல்லை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக, நாளை (மார்ச் 22-ஆம் தேதி) ஜனதா ஊரடங்கு உத்தரவினை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

இதன்பொருட்டு இன்று நள்ளிரவு முதலே பயணிகள் ரயில் சேவை ரத்தாகும் என தெரிகிறது. நாளைய தினத்தை பொருத்தவரை பேருந்துகள், அதிவிரைவு ரயில்கள், பால் விநியோகம், காய்கறி விற்பனை, உள்ளிட்ட சேவைகள் இயங்காது என்றும் மேலும் உணவகங்கள், டாஸ்மாக், வணிகக்கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று (மார்ச் 21 முதல்) பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Tags : #BEACH
