'மீன்கள் கடித்த கண்களுடன்..' ... 'கரையொதுங்கிய சடலம்'.. சென்னை கடற்கரையை.. பீதியில் ஆழ்த்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 26, 2019 12:38 PM

சென்னை திருவான்மியூர் குப்பம் கடற்கரை பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் நடுங்க வைத்துள்ளது.

Unknown body of a youngster found near thiruvanmiyur beach

சென்னை திருவான்மியூர் குப்பம் அருகே உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞரின்  சடலம் கரை ஒதுங்கியதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னர் அப்பகுதி மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார் பிரேதத்தை கைப்பற்றினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் எவ்வித காயமும் இல்லை எனினும், அவரது கண்களில் கடல் மீன்கள் கடித்த தடம் உள்ளது. சற்றே நீளமான முடி கொண்ட இந்த நபரின் சடலம் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ளபடி  கரையொதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #THIRUVANMIYUR #BEACH