‘சுற்றுலா வந்த தம்பதி’.. ‘விளையாட்டாய் செய்த காரியம்’.. ‘வினையில் முடிந்ததால் ஏற்பட்ட பரிதாபம்..’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Aug 21, 2019 02:31 PM

இத்தாலிக்கு சுற்றுலா வந்த ஒரு தம்பதி கடற்கரையில் மணலை நினைவுப் பொருளாக எடுத்துச் சென்றது பிரச்சனையில் முடிந்துள்ளது.

Couple Face Jail For Taking Sand From Italian Beach

இத்தாலியிலுள்ள சார்தீனியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த ஒரு தம்பதி அங்கிருந்து திரும்பும்போது நினைவுப் பொருளாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றுள்ளனர். போர்டோ டோரசில் இருந்து படகு வழியாக பிரான்சுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்ட அவர்கள் இதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் 14 பாட்டில்களில் மணலை நிரப்பி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.  

கடந்த 2017ஆம் ஆண்டு  இத்தாலியில் சுற்றுலா பயணிகள் கடற்கரைகளை சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும், அங்குள்ள அரிய பொருட்களை சேதப்படுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரைகளில் உள்ள மணல், கூழாங்கற்கள் மற்றும் கடற்பாசிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடற்கரை மணலை எடுத்துச் சென்றதற்காக தற்போது பிடிபட்டுள்ள தம்பதிக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை இதற்காக சிறை தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் விசாரணையில் அவர்கள் விடுமுறை நினைவுப் பொருளாகவே மணலை எடுத்துச் செல்ல முயற்சித்ததாகவும், அது விதிமீறல் எனத் தெரியாது எனவும் கூறியுள்ளனர்.

Tags : #ITALY #BEACH #COUPLE #SAND #SOUVENIR #JAIL