'தொடர்ந்து மந்த நிலை'...'ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்'...அதிர்ச்சியில் பணியாளர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 28, 2019 02:25 PM

வாகன விற்பனை துறையில் தொடர்ந்து நிலவி வரும் மந்தநிலை காரணமாக, டிவிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான சுந்தரம் கிளேட்டான் நிறுவனம் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. இது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sundaram-Clayton declares 3 Non Working Days Amid Slowdown

சென்னை மற்றும் ஓசூரில் இயங்கி வரும் இந்த நிறுவனம் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே தற்போது வாகன உற்பத்தி துறையில் நிலவும் சுணக்கம் ஆட்டோமொபைல் துறையை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 31ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, 3 நாட்களை வேலை இல்லாத நாட்களாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை இந்நிறுவனம் வேலை இல்லாத நாட்களை அறிவித்திருந்தது. இதனிடையே தொடர்ந்து இதுபோன்று வேலை இல்லாத நாட்களாக அறிவிக்கப்பட்டு வருவது அந்நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், கலகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : #JOBS #SUNDARAM-CLAYTON #PLANTS #NON-WORKING DAYS