'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க!?'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐ.பி.எல். போட்டிகளின் போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பி.சி.சி.ஐ.யும், அணி நிர்வாகங்களும் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோடைக்காலத் திருவிழாவாகக் கருதப்படும் 20 ஓவர் ஐ.பி.எல். தொடர் வருகின்ற 29ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு போட்டியையும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐ.பி.எல் போட்டிகளை தள்ளிவைப்பதா? அல்லது ரசிகர்களை தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதிப்பதா? என பதிலளிக்க பி.சி.சி.ஐ. தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையைடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.