'இந்த கேனை பொண்ணுகளால தூக்க முடியல'...'இத பண்ணலாம்'...'கேஸ் போட்ட பெண்'...கடுப்பான ஜட்ஜ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 10, 2019 11:51 AM
சென்னையில் தற்போது அனைத்து இடங்களிலும் 20 லிட்டர் தண்ணீர் கேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகை கேன்களை பெண்களால் கையாள முடியவில்லை என்றும் எனவே கேனின் வடிவத்தை மாற்றி அமைக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என, சென்னையை சேர்ந்த தீபா ஸ்ரீ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனிடையே இந்த வகை கேன்களை முறையாக பராமரிப்பதில்லை என்றும் எனவே அதற்கு முறையான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை பார்த்து கோபமடைந்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.
மேலும் மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல எனவும், மனுதாரர்களின் இது போன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க தபால் நிலையமும் அல்ல எனவும் கடுமையாக கூறினார்கள்.