கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்.. கல்யாணத்தை பார்க்க வந்த உறவுகள்.. மனசு நிறையல.. வயிறு நிறைஞ்சு போன சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணப்பெண் ஒருவர் தாலி ஏறும் சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகனை பிடிக்கவில்லை எனச் சொல்லி தனது திருமணத்தையே நிறுத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியா (வயது 25) என்பவருக்கும் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 31) என்பவருக்கும் இருவீட்டார் இணைந்து திருமணம் பேசி முடித்து இருந்தனர். கடந்த மாதமே இரு வீட்டார் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த சூழலில் சண்முகப்பிரியா- பாலமுருகன் ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
நேற்று முன் தினமே மாப்பிள்ளை அழைப்பு, பாட்டுக் கச்சேரி, திருமண வரவேற்பு எல்லாம் பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக இரு பக்க உறவினர்கள் சூழ நடந்தது. ஆனால், திருமணத்தன்று நேற்று காலையில் தாலி ஏற இன்னும் சில நேரமே இருக்கும் சூழலில் ‘கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன்’ என மறுப்புத் தெரிவித்துள்ளார் மணப்பெண் சண்முகப்பிரியா. காலை 9 மணிக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு திடீரென சண்முகப்பிரியா திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த போது இரு குடும்பங்களும் அதிர்ந்து போயின.
ஆனாலும், சமாளித்து மணப்பெண் உடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட சமாதான முயற்சிகள் நடைபெற்றன. பெண் வீட்டார் அனைவரும் மணப்பெண்ணை திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்க பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால், தன் முடிவையும் மீறி தனக்குத் திருமணம் செய்து வைத்தால் தற்கொலை செய்துகொள்வதாக மணப்பெண் தெரிவித்துள்ளார். மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி தாலியை மேடையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார் மணப்பெண்.
இதனால், வேறு வழியின்றி உறவினர்களிடம் மன்னிப்பு தெரிவித்து கல்யாணத்தை நிறுத்துவதாக மணப்பெண் வீட்டார் அறிவித்தனர். ஆனால், திருமண விழாவுக்கு வருபவர்களுக்காக அத்தனை வகையான உணவுகளும் தயார் செய்யப்பட்டு இருந்தன. உறவினர்களும் மண்டபம் முழுக்கக் கூடியிருந்தனர். இதனால் உணவை வீணாக்க வேண்டாம் என இருவீட்டாரும் உறவினர்களிடம் கேட்டுக்கொள்ள இரு தரப்பு சொந்தங்களும் காலை திருமண பந்தியை முடித்துவிட்டு அமைதியாக மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

மற்ற செய்திகள்
