‘குழந்தைகள் தினத்தில்’... ‘சிஎஸ்கே பகிர்ந்த வைரல் வீடியோ’... ‘லிஸ்ட்ல அவரையும் சேர்த்துட்டீங்களா???’... ‘ஜாலியாக கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Nov 14, 2020 07:58 PM

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பலரும், குழந்தைகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சிஎஸ்கே பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Including sam curran, CSK releases children\'s video of cricket players

ஐபிஎல் போட்டி உள்ளூரில் நடக்கும் என்பதால், அப்போட்டியை காண்பதை விட, அங்கு நடக்கும் விஷயங்கள் சில நேரங்களில் சுவாரஸ்யத்தைக் கூட்டும். கிரிக்கெட் ரசிகர்கள் இதனை மிகவும் ரசிப்பதாலேயே, ஐபிஎல் போட்டி இந்தியாவில் கடந்த 2008-ல் இருந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் கொரோனா என்பதால், ரசிகர்கள் இன்றி, ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இதனால் ரசிகர்கள், வீரர்கள் அனைவரும் வருந்தினாலும், இந்த வருடமும் ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளின் போது கிரிக்கெட் வீரர்களின் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து தங்களது சுட்டித் தனத்தை காட்டுவர். அந்தவகையில் மைதானத்தில்,  தங்கியிருக்கும் ஹோட்டலில்  கிரிக்கெட் வீரர்களின் குழந்தைகள் செய்யும் விஷயங்களை தொகுத்து, சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், தோனி, ரெய்னா, ப்ராவோ, வாட்சன் போன்ற வீரர்களின் குழந்தைகளோடு, கடைசியாக சிஎஸ்கேவின் செல்லக் குழந்தை என அழைக்கப்படும் சாம் கரணின் க்ளிப்பும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் ஜாலியாக அவரை கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். இது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Including sam curran, CSK releases children's video of cricket players | Sports News.