'23 ஆண்டுகளுக்கு பின்...' 'களைகட்டும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு!'... அப்டி என்ன 'ஸ்பெஷல்'?!...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 31, 2020 05:15 PM

தஞ்சை பெரியகோவிலில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் மீண்டும் கோபுரங்களில் பொருத்தப்பட்டு, குடமுழுக்கிற்கான புனித நீர் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

tanjore big temple is all set for a grandeur celebration

தஞ்சாவூரின் பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 5ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அதற்காக, கோவில் கோபுரங்களில் இருந்த கலசங்கள் அனைத்தும் 23 ஆண்டுகளுக்கு பின் கீழே இறக்கப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டன.

அப்போது, கோபுரக் கலசங்களில் புதிய தங்க முலாம் பூசப்பட்டது. மூலவர் விமான கோபுரத்தின் மீது பிரம்மாண்ட கலசத்தை வைக்கும் பணி நடைபெற்றது. அதில், 500 கிலோ அளவில் நவதானியங்கள் நிரப்பப்பட்டன. அதன் பின், பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கலசம் கோபுரத்தின் மீது பொருத்தப்பட்டது.

மேலும், குடமுழுக்கிற்கான முதல்கால யாகபூஜை, நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தஞ்சை பள்ளியக்கிரகாரம் வெண்ணாற்றில் இருந்து கலசத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு யாகபூஜைக்காக கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், அங்கிருந்து யானை மீது புனிதநீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாக  எடுத்து வரப்படுகிறது.

Tags : #THANJAVURBIGTEMPLE #HOLY #CELEBRATION