'கொரோனா நோயாளியைப் பாக்க போன சொந்தக்காரர்'... 'கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம செஞ்ச வேலை'... பரிதாபமாகப் போன உயிர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளியைப் பார்க்கச் சென்ற உறவினர் செய்த வேலையால், அநியாயமாக ஒரு உயிர் போன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள எம்பிஎஸ் மருத்துவமனையின் கோரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வென்டிலேட்டர் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக உறவினர்கள் வந்துள்ளார்கள். அப்போது அந்த நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்த அறை மிகவும் சூடாக இருந்துள்ளது.
அப்போது வென்டிலேட்டர் இணைப்புக்கான பிளக்கை பிடுங்கிவிட்டு அதில் ஏர் கூலருக்கான பிளக்கை சொருகி உள்ளனர். இதனால் வென்டிலேட்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பேட்டரி தீர்ந்ததால் நோயாளியின் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து நோயாளியின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 15ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நோயாளி இறந்ததால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். ரகளையில் ஈடுபட்டதோடு மருத்துவர்களையும் தாக்கினார்கள். இதனால் கோபமடைந்த மருத்துவர்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து நோயாளியின் மரணம் குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.