‘எத்தன தடவ சொன்னேன்’.. ‘ஒழுங்கா பஸ்ஸ திருப்பு இல்லனா..’ பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 31, 2019 04:31 PM

கேரளாவில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக ஓட்டுநரிடம் தகராறு செய்த பெண்ணின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Kerala Woman arguments with bus conductor video goes viral

கேரளா மாநிலத்தில் பெண் ஒருவர் ஆழப்புழாவில் இருந்து மலையாளப்புழா என்ற பகுதிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அப்பெண் இறங்க வேண்டிய நிறுத்ததில் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேருந்தின் கேபினில் ஏறி அமர்ந்துகொண்டு ‘பஸ்ஸ திருப்புங்க, நான் இறங்கவேண்டிய இடத்து பஸ்ஸ திருப்புங்க’ என தகராறு செய்துள்ளார். இது பேருந்தில் இருந்த சகபயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், யார் மீது தவறு என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #ALAPPUZHA #BUS #DRIVER #CONDUCTOR #WOMAN