'பிளாஸ்டிக்கை எடைக்கு போடுங்க'.. 'உணவை வாங்கிக்கங்க'.. உணவகத்தின் புது முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 10, 2019 05:53 PM

இந்தியா முழுவதும் பல்வேறு வகையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு கடைபிடிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. 

chhattisgarh cafe provides after exchanging plastics

கடந்த வருடம் கடற்கரை ஒன்றில் ஒதுங்கிய திமிங்கலத்தின் உடலில் இருந்து அதிக பிளாஸ்டிக்குகள் கண்டெடுக்கப்பட்டன. இன்னும் மாடுகள் உள்ளிட்ட பல விலங்கினங்கள் வீணாகும் பிளாஸ்டிக்குகளை உட்கொண்டு வியாதிகளுக்குள்ளாகின்றன. ‘

இவற்றால் பிளாஸ்டிக்குகளும் ஒழிக்கப்படுவதில்லை. இதனைத் தடுக்கும் முயற்சியில் சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளின் எடைக்கு சமமான ரூபாய்க்கு உணவினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கார்பேஜ் கஃபே என்கிற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ தொடங்கி வைத்துள்ளார்.

Tags : #FOOD #CARBAGECAFE #PLASTICBAN