9 பேருடன் கல்யாணம்.. எல்லார்கிட்டயும் சொன்ன ஒரே பொய்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் அருகே தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு பணம் மற்றும் நகையுடன் சென்றுவிட்டதாக கணவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "யாரோ எடிட் பண்ணிட்டாங்க".. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வச்ச பிரித்வி ஷா.. என்ன ஆச்சு?
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். 24 வயதான இவருக்கு கடந்த ஆண்டு சோசியல் மீடியா மூலமாக இளம்பெண் ஒருவருடைய அறிமுகம் கிடைத்திருக்கிறது. தன்னை மகாலெட்சுமி என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த பெண், தனக்கு உறவினர்கள் யாரும் கிடையாது என தெரிவித்திருக்கிறார். நட்பாக இருவரும் பேசிவந்த நிலையில் நாளடைவில் காதல் மலர்ந்திருக்கிறது.
இதனையடுத்து, தனது வீட்டினரிடம் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அருள்ராஜ். அதன்படி 23.01.2022 அன்று திருவதிகையில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். இப்படி 4 மாதங்கள் சென்ற நிலையில் திடீரென தனது தோழி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி சென்னை சென்றிருக்கிறார் மகாலட்சுமி. அப்போது ஆறரை சவரன் நகை, 83 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அதன்பின்னர் அருள்ராஜ் உடன் பேசுவதை அவர் தவிர்த்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் போன் மூலம் மகாலெட்சுமியை தொடர்பு கொண்டிருக்கிறார் அருள்ராஜ். ஆனால், தொடர்ந்து தன்னை புறக்கணித்ததால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து, தனது மனைவி கொடுத்த முகவரிக்கு சென்று விசாரித்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு பல உண்மைகள் தெரியவந்திருக்கிறது. தனக்கு உறவினர்கள் யாரும் கிடையாது என பொய்கூறி பலரை திருமணம் செய்து பணம் மற்றும் நகையுடன் அந்த பெண்மணி தப்பிச்சென்றிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதுதொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அருள்ராஜ்," திருமணம் செய்து என்னை ஏமாற்றி நகை மற்றும் பணத்துடன் மனைவி தப்பிச் சென்றுவிட்டார். அவர் கொடுத்த முகவரியில் விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே பலமுறை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. மேலும், என்னை அவர் 9 வது முறையாக திருமணம் செய்து பணம் மற்றும் நகையுடன் தப்பிச் சென்றிருக்கிறார். உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
9 பேரை திருமணம் செய்து, பணம் மற்றும் நகையுடன் தலைமறைவான பெண்ணை பிடிக்கும் பணியில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வள்ளி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.