நடிகை சித்ரா தங்கி இருந்த ஹோட்டல்... சிசிடிவி கேமராவில் பதிவானது என்ன?.. துப்பு துலக்கும் போது... போலீசார் கடும் அதிர்ச்சி!.. புதிய சிக்கல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சின்னத்திரை நடிகை சித்ரா தங்கி இருந்த ஹோட்டலில் சிசிடிவி கேமரா சரிவர இயங்காததால் காவல்துறையினர் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள, நசரத்பேட்டையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை நடிகர்கள் வந்து தங்குவது வழக்கம்.
இந்நிலையில், இதே ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சித்ரா தங்கி இருந்த அறையின் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, அங்கு இருக்கும் சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஹோட்டல் மேனேஜரிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஹோட்டல் மேனேஜர் மற்றும் ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் உட்பட மூன்று பேரை காவல் நிலையம் கொண்டு வந்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி வரும் நிலையில், பிரபல ஹோட்டலில் சிசிடிவி கேமரா சரியாக செயல்படாமல் இருப்பது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
