‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் புகழ் நடிகை ‘சித்ரா’ ஹோட்டலில் தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சித்ரா அறிமுகமானார். இதனை அடுத்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் ‘சரவணன் மீனாட்சி’ (சீசன் 2) சீரியலில் சிறிய கதாபாத்திரத்திலும் சித்ரா நடித்திருந்தார்.
இதனை அடுத்து விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ‘முல்லை’ என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். இந்த சீரியலில் இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.
இந்நிலையில் இன்று (09.12.2020) அதிகாலை சென்னை அருகே உள்ள நசேரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சித்ராவில் உடலை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையை சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
