VIDEO: சித்ரா மரணத்தில் அதிரடி திருப்பம்!.. "அவளோட LOVER நல்லவர் கிடையாது"!.. "இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கைய கெடுக்கப் போறாங்க?".. நெருங்கிய தோழி பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தைப் பற்றியும், அவரது கணவரைப் பற்றியும், அவரது நெருங்கிய தோழி ரேகா நாயர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவரான சித்ரா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முதலில் தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் சீரியல்களில் நடித்ததால் பிரபலமானார்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 9, 2020) காலை சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில், தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்து வரும் நிலையில், நடிகை ரேகா நாயர் சித்ராவின் கணவரைப் பற்றி பல அதிர்ச்சிக்குரிய தகவல்களை கூறியுள்ளார்.
Behindwoodsக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "சித்ராவின் கணவர் ஹேம்நாத் நல்லவர் இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பது பலருக்கும் தெரியும். அவர்களின் திருமண நிச்சயம் நடைபெற்றதும், நான் சித்ராவிடம் இது குறித்து பேசினேன். நீ தப்பான நபரை தேர்வு செய்திருக்கிறாய்" என்று எச்சரித்தேன்.
மேலும், "அவர் பெண்கள் விஷயத்தில் சரியில்லை. பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது. அவரது பின்னணியை அலசினால், ஏராளமான உண்மைகள் தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.
"சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலை செய்ய தூண்டப்பட்டாரா" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார், நடிகை ரேகா நாயர்.
சித்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், சித்ராவின் தோழி ரேகா நாயரின் இந்த கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்
