‘ஏழை மக்களுக்கு உதவ’... ‘இத்தனை கோடிக்கு’... ‘தனது சொத்துக்களை அடமானம் வைத்த நடிகர் சோனு சூட்?’...
முகப்பு > செய்திகள் > கதைகள்ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ. 10 கோடிக்கு தனது 8 சொத்துக்களை நடிகர் சோனு சூட் அடகு வைத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட போது, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிரமப்பட்டு வந்தனர். இதனை புரிந்து கொண்ட நடிகர் சோனு சூட், சிறப்பு பேருந்துகள் மற்றும் விமானங்களின் மூலம் அவர்களை அனுப்பி பேருதவியை செய்தார். அதேபோல, வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களையும் விமானம் மூலம் சொந்த செலவில் தாயகம் அழைத்து வந்தார்.
அவரது உதவி இதோடு நின்று விடவில்லை. ஏழை விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, மலைக்கிராம மாணவர்களின் ஆன்லைன் படிப்பிற்கு ஏதுவாக செல்போன் டவர் அமைத்து கொடுத்தது, அறுவை சிகிச்சை உதவிக்கு பணம் தேவைப்படுவோருக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறது. கொரோனா சமயத்தில் திரைப்பட வாய்ப்புகளும் இல்லாததால், அவர் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தனது மற்றும் மனைவி சோனாலி பெயரில் உள்ள இரு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகளின் பத்திரங்களை ரூ. 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஜூகுவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ரூ. 10 கோடி லோன் கேட்டு இருப்பதாகவும், இந்த கடன் தொகைக்கான ஒப்பந்தத்திற்கு, முன்பணமாக 5 லட்சம் ரூபாய் கடந்த நவம்பர் 24-ம் தேதி கட்டியதாகவும் ‘மணி கண்ட்ரோல்’ வர்த்தக செய்தி தளம் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து சோனு சூட் தரப்பிலோ, வங்கி தரப்பிலோ எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, கொரோனா காலத்தில் வருமானம் இல்லாத நிலையிலும், சொத்துக்களை அடமானம் வைத்து தொடர்ந்து உதவிகளை செய்து வரும் சோனு சூட்டின் செயல்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தற்போதும் அவர் மக்களுக்கு உதவி வருகிறார்.

மற்ற செய்திகள்
