‘இருவருக்கும் சண்டையா?.. தற்கொலையில் சந்தேகமா?.. எதுக்காக ஹோட்டல்ல தங்கினாங்க?’ - உயிரிழந்த நடிகை சித்ராவின் தந்தை பரபர பேட்டி .. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கணவருடன் தங்கியிருந்தபோது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவியும் அந்நேரத்தில் சித்ராவுடன் தங்கி இருந்ததால், அவரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சித்ராவின் கன்னத்தில் காயம் இருந்தது தொடர்பான விவகாரமும் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தன் மகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “மகளின் தற்கொலை குறித்து சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை. மகளுக்கும் அவரது கணவருக்கும் எந்த சண்டையும் இல்லை. இருவருக்கும் பெரியோர்களாக பார்த்து தான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்தோம். பிப்ரவரியில் திருமணம் செய்துவைக்க எண்ணினோம். இரவு வீடு செல்ல நேரமில்லாததால், அயர்ச்சியில் நேற்று ஒருநாள் மட்டுமே நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்கள். இது தொடர்பாக நான் சந்தேகப்படவில்லை. ஆனால் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
