அரசியல் கட்சியாக மாறுகிறது விஜய் மக்கள் இயக்கம்!.. வரும் தேர்தலில் போட்டியா?.. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வரும் தேர்தலில் அவர் களமிறங்குகிறாரா? என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்தது. தளபதி விஜய் அரசியலில் இறங்கப் போகிறார் என அவரது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமறிய Behindwoods தரப்பில் இருந்து தளபதி விஜய் அவர்களின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை தொடர்பு கொண்டோம்.
அவரிடம் இந்த கேள்வியை முன்வைத்தபோது, பதிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர், '' நாங்கள் கட்சிப்பெயரை பதிவு செய்தது உண்மை தான். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் அங்கீகாரத்திற்காக இதை செய்தோம்.
இதற்கு நாளையே நாங்கள் அரசியலுக்கு வரப்போகிறோம் என அர்த்தமல்ல" என்று தெரிவித்தார். இதனால் நடிகர் விஜய் அரசியலில் தற்போது களமிறங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்
