முதலில் குஷ்பு... அடுத்து விஜயசாந்தி... பாஜகவை நோக்கி படையெடுக்கும் திரை நட்சத்திரங்கள்!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானாவை சேர்ந்த நடிகை விஜயசாந்தி, காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ள நிலையில், நாளை பாஜகவில் இணைவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் எம்.பியும், நடிகையுமான விஜயசாந்தி நாளை பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை புது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு இவர் பாஜவின் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு முதல் முதலாக பாஜகவில் இணைந்த விஜயசாந்தி, அப்போது பாஜகவின் மகளிரணி செயலாளராக பதவி வகித்தார். அதன் பிறகு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைந்து தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கான போராட்டங்களில் இணைந்தார்.
இதன்பின்னர் டிஆர்எஸ் கட்சியின் சார்பாக 2009 முதல் 2014 வரை மேதக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
பின்னர் 2014 முதல் காங்கிரஸ் கட்சியின் இணைந்து பணியாற்றிவந்தார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இன்று காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினார் விஜயசாந்தி.
தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் இரண்டாவது பெரிய நட்சத்திர நடிகை விஜயசாந்தி.
இதற்கு முன்பாக தமிழகத்தில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்புவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சமீபத்தில்தான் இணைந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
