சூரி வழக்கை விசாரித்து வந்த ‘நீதிபதி எடுத்த திடீர் முடிவு!’.. ‘விஷ்ணு விஷாலின்’ தந்தை மீதான வழக்கில் ‘பரபரப்பு’ திருப்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 2015-ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரின் தயாரிப்பில் 'வீர தீர சூரன்' எனும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகியதாகவும் படப்பிடிப்புகள் நடந்ததாகவும், அப்போது நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பேசிய சம்பளம் தராததாகவும், அதுபற்றி சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதில், சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் அன்புவேல் ராஜனும், சூரியிடம் பல்வேறு தவணைகளாக ₹3.10 கோடி பெற்றதாகவும், ஆனால் அதன் பிறகே அந்த நிலத்தில் பல பிரச்சினைகள் இருப்பது தனக்கு தெரிய வந்ததாகவும் நடிகர் சூரி கூற, நிலத்தை திருப்பி வாங்கிக் கொண்டு, பணத்தை திருப்பித் தருதாகவும்க் கூறி, சூரியிடம் ரமேஷ் குடவாலா ஒப்பந்தம் ஒன்றை பதிவு செய்ததாக சூரி தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், தன்னிடம் வாங்கிய பணத்தில் ரூ.40 லட்சம் மட்டும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் கொடுத்ததாகவும், மீதி தொகையான ரூ.2.70 கோடியை திருப்பி தருமாறும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்தார். இதனால் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், நடிகர் சூரி கடந்த 1-ம் தேதி புகார் அளிக்க, அடையாறு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் அந்த விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து, இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்
