'விலா எலும்பை பதம் பார்த்த பவுன்சர்'... 'கவலையில் ரசிகர்கள்'... அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jan 18, 2020 02:23 PM

ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் பாட் கமின்ஸ் வீசிய பவுன்சர் ஷிகர் தவானின் விலா எலும்பை பதம் பார்த்தது. இதனால் பெங்களூரு போட்டியில் களமிறங்குவாரா, என்பது குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.

Indian Cricket Team is confident Dhawan will be available for 3rd ODI

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் பாட் கமின்ஸ், அதிவேக பவுன்சர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். முதல் போட்டியில் அவரது பந்து ரிஷப் பந்த் மண்டையை பதம் பார்த்த நிலையில் அவர், நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. இதனிடையே ஷிகர் தவானுக்கும், பாட் கமின்ஸுக்கும் ஏழாம் பொருத்தமா என்பது தெரியவில்லை.

உலகக்கோப்பையின் போது பாட் கமின்ஸ் வீசிய பந்து, தாவனின் இடதுகை கட்டை விரலை பதம் பார்த்தது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு தொடர்ந்து ஆட முடியாமல் போனது. இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் காயம் காரணமாக தனது சதத்தை தவறவிட்டார். நல்ல தொடக்க வீரர் இப்படி தொடர்ந்து காயத்தில் சிக்குவது அதிர்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே பெங்களூரு ஒருநாள் போட்டியில் தவான் பங்கேற்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என பிசிசிஐ  தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது நல்ல பார்மில் இருக்கும் தவான் மீண்டும் காயத்தில் சிக்க கூடாது என்பதே ரசிகர்களின் பிராத்தனையாக உள்ளது.

Tags : #CRICKET #INDIA VS AUSTRALIA #SHIKHAR DHAWAN #FINAL ODI #INDIAN CRICKET TEAM