‘7000 பேரை வீட்டுக்கு அனுப்பும்’.. ‘பிரபல நிறுவனம்’... ‘கலக்கத்தில் ஊழியர்கள்’!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Oct 31, 2019 05:49 PM

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னிலையில் விளங்கும், காக்னிசென்ட் ஐடி நிறுவனம், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Cognizant to cut up to 12,000 jobs in a bid to pare costs

அமெரிக்காவின் நியூஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல காக்னிசென்ட் நிறுவனம். இந்த நிறுவனம், தற்போது பணியில் இருக்கும், நடுத்தர ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, சுமார் 10,000 முதல் 12,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை ஈடுகட்ட, மறுசீரமைத்தல் (Re-Skill) மற்றும் மறுபயன்பாடு (Redeploy) அடிப்படையில், கடினமான தேர்வுகள் வைத்து, நீக்கப்பட உள்ள ஊழியர்களில் இருந்து, சுமார் 5000 பணியாளர்களை மட்டும், வேறு பணிகளுக்கு அமர்த்த உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால், நீக்கப்பட உள்ள 12,000 ஊழியர்களில், சுமார் 5000 முதல் 7000 வரையிலான ஊழியர்கள், மொத்தமாக வேலையின்றி வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதாவது, காக்னிசென்ட் நிறுவனத்தில், தற்போது 2,89,900 பணியாளர்கள் உள்ளனர். அதன் மொத்த பணியாளர்களில், 2 சதவிகித ஊழியர்கள், பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் இந்தியர்களே பணி புரிவதாக கூறப்படுகிறது.

இதனால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. வரும் ஜனவரி மாதத்தில் துவங்கும் காலாண்டு முதல், இந்த பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய லாபம் இல்லாதது, ஐடி துறையில் நீடிக்கும் கடுமையான போட்டி மற்றும் மந்தநிலை காரணமாக, தனது செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : #COGNIZANT #JOBLESS #EMPLOYEES #LAYOFF